போர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

35

போர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

போர் குற்றவாளி ராஜபக்சேவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஏற்ப்பாடு செய்துள்ளது. மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இப் போராட்டம் நடைபெறவுள்ளதால், அனைத்து தமிழர்களும் இதில் கலந்துகொண்டு இளையோர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தற்போது அமெரிக்க சென்றுள்ள போர் குற்றவாளி ராஜபக்சேவை அந் நாட்டு அதிபர் ஓபாமாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்குற்றங்களை மறைக்கும் நோக்கில், ராஜபக்சே இதனைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் ராஜபக்சேவோடு ஓபாமா எப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக்கூடாது எனவும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும் கண்டித்தும், அத்தோடு போர் குற்றவாளியான ராஜபக்சேவை அமெரிக்கா வரவேற்க்கக்கூடாது என்னும் கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராடம் நடைபெறவுள்ளதாக இளையோர்கள் தெரிவித்துள்ளனர்.

இடம் : 24 Grosvenor Square, London,W1A 1AE

காலம்  நேரம் : 22.01.2011 – மதியம் 12.00 மணி முதல்4மணிவரை போராட்டம் நடைபெறும்

இடம் மற்றும் வாகன ஒழுங்குகளின் விபரங்களிற்கு:- 07405691677

வரை படங்களும் இணைக்கப்பட்டுள்ளது:

முந்தைய செய்திமனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்
அடுத்த செய்தி22-1-2011 அன்று ஜோலார்பேட்டையில் மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் செந்தமிழன் சீமான் சிறப்புரை.