இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் – கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகில் ஏறிய இலங்கைக் கடற்படை வீரர்கள், அவர்களை அதில் இருந்து கடலுக்குள் குதித்துவிடுமாறு மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு மீனவர் மறுத்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், சுருக்குக் கயிறால் அந்த மீனவரின் கழுத்தில் கட்டி கடலுக்குள் தூக்கி வீசியுள்ளார்.
தொடரும் இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற சம்பவங்கள், மீனவர்களிடையே கடும் அச்சத்தையும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி தமது கடமையை நிறைவேற்றினார்.இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து தனது தமிழின விரோதபோக்கை கடைபிடித்து வருகிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.