தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.

36
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான கொளத்தூர் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தங்கராசு,ஆவல் கணேசன், அமுதா நம்பி,சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் கயல்விழி, செல்வாரசு வழக்கறிஞர் மருதநாயகம்,அரிமா நாதன்,பக்தவச்சலம், மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட சென்னை தேவா, கௌரிசங்கர், சரவணன், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.