தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடலூர் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்.

20

12.01.2011 அன்று தமிழக மீனவர் ஜெகதாபட்டினம் திரு.பாண்டியன் அவர்கள் மீன் பிடிக்க சென்றபோது சிங்கள கடற்படை ராணுவத்தினரால் சுட்டு கொல்லபட்டார்.தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது .இதை தடுத்து நிறுத்தகோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடலூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது .இப்போராட்டம் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு .தீபன் தலைமையில் நடைபெற்றது . இதில் கலந்துகொண்டவர்களில் 25௦ பேர் மட்டும் கைதானார்கள். இறுதியில் தனி நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.