தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

4

இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் – கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள்தலைமைவகிக்க மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலை வகிக்க இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.