உலக நாடுகள் அனைத்துமே போர்க் குற்றவாளி என அறிவித்துள்ள ராஜபக்சே வின் கைகுலுக்கும் படத்தைப் இணைத்து அதன் மேலேஎல்லாம் முடியும் என்னும் பொருளில் everything is possible என்று வெளியிட்டு உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 24 பள்ளிகள் உள்ளன அதில் ஒன்று நம் தாய் தமிழ் நாட்டில் உள்ள உடுமலைப்பேட்டை அருகே கேரளா வன எல்லையில் அமைந்துள்ள அமராவதி அணைப்பகுதில் உள்ளது .
தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழினக் கொலைகாரனை சிறப்பித்து வெளியிட்டுள்ளதை கண்டித்து அந்த நாள்காட்டியை உடுமலை பேருந்து நிலையம் முன்பு எரிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க , விடுதலை சிறுத்தை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, புரட்சி புலிகள், பா.மா.க, தமிழர் தேசிய இயக்கம், இணைந்து வருகின்ற 19.01.2011 அறிவன் கிழமை அன்று காலை 10 மணிக்கு ராஜபக்சே நாட்காட்டி எரிப்பு போராட்டம் நிகழ்த்த உள்ளனர்.
உணர்வுள்ள தமிழர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்று, நம் எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்..!