“சாட்சியத்துக்கு தயார்”- புதுக்கோட்டை மீனவர்கள்

16

இந்திய இலங்கை கடற்பரப்பில் இம்மாதம் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாங்கள் சாட்சியம் அளிக்கத் தயார் என புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டனர் இது  தொடர்பில், இந்தியத் தரப்பினர் தகுந்த ஆதாரங்களை முன்வைத்தால் இது குறித்து இலங்கை தரப்பு விசாரணை நடத்தத் தயார் என இலங்கையின் புதிய கடற்படை தளபதி கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்து தொடர்பில் பிபிசியிடம் பேசிய புதுக்கோட்டை ஜகதாப்பட்டணம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவரான ராமகிருஷ்ணன், குறிப்பிட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டு, மற்றும் திசை காட்டும் கருவிகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் போன்றவை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான மீனவர் பயணம் செய்த படகும் தடயமாக இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
தமது மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுமாயின் தாங்கள் சாட்சியம் அளிக்கத் தயாரக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முந்தைய செய்திசைனிக் பள்ளி போர் குற்றவாளி ராஜபக்சே நாட்காட்டி எரிப்புப் போராட்டம்
அடுத்த செய்திபெட்ரோல் விலை உயர்வு-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – சீமான் கண்டனம்