நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் கோவை நகரில் இனி இரவு 12 மணிவரைக்கும் உணவகங்கள் இயங்கும் என கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக கோவை நகரில் உணவகங்கள் அனைத்தும் இரவு 10 மணிவரை மட்டுமே இயங்கி வந்தது.இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த 27.12.2010 மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆனந்தராசு அவர்கள் தலைமையில் உணவகங்களை இரவு12 மணிவரைக்கும் திறக்க அனுமத்திக்கவேண்டும் என மனு கொடுத்தனர் இதனையடுத்து மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இனி உணவகங்கள் இரவு 12 மணிவரைக்கும் இயங்கலாம் என தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சனையை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியினரை கோவை நகர மக்கள் பெரிதும் பாராட்டினர்.
முகப்பு கட்சி செய்திகள்