சிங்கள படையினருக்கு தமிழ் பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா: விக்கிலீக்ஸ்

95
கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா இராணுவத்தினரினறுக்கு துரோகி கருணா தன்னிடம் இருந்த பெண் போராளிகளை மிரட்டி பாலியல் தொழில் நடத்தியதாக விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்று விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, துணை இராணுவக் குழுக்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுமாறு சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா குழுவினர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது சிறீலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக உள்ள கருணா, இந்த ஆவணம் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்காக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மிடம் இருந்த போராளிகளை கொண்டு பாலியல் தொழிலையும் நடத்தியதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்திஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் – சிபிஐ கண்டுபிடிப்பு.
அடுத்த செய்திWikiLeaks: Gotabaya sanctioned extra-judicial killings by Paramilitaries