23-12-2010 இன்று ராகுல் காந்தி திருச்சிராப்பள்ளி வருவதன் காரணமாக முன்னெச்செரிக்கையாக நாம் தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு, பெரியார் திராவிடர் கழகம் அய்யா ராஜேந்திரன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், ம.க.இ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, என 8பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் க.க நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர் ராகுல்காந்தி புறப்பட்ட பின்னர் விடுவிப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 10பேர் கொண்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
முகப்பு கட்சி செய்திகள்