[ படங்கள், காணொளிகள் இணைப்பு ]மாவீரர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாவீரர் தின ஈகைச்சுடரோட்டம்.

33
தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில்  மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு சென்னை தியாகராய நகர் செ. தெ .நாயகம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலாவதாக மேடவாக்கத்தில் உள்ள பெருந்தமிழர் பாவலரேறு  பெருஞ்சித்தனார் நினைவிடத்தில் நாம் தமிழர் தலைமை நிர்வாகி தடா ராசா அவர்கள்  பெருஞ்சித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு அவர்கள் பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு வீரவணக்க உறுதிமொழி ஏற்கும்  நிகழ்வு நடைபெற்றது. தடா ராசா அவர்கள்  பெருஞ்சித்தனார் மற்றும் அவர் மகன் பொழிழலுடன் ஒரு வருடம் சிறையில் இருந்த அனுபவத்தை அங்கிருந்த உணர்வாளர்களிடம்   பகிர்ந்து கொண்டார்.
பெருந்தமிழர் பெருஞ்சித்தனார்  அவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை தமிழ் நாடு முழுக்க  ஊர் ஊராக அழைத்து சென்று மக்களுக்கு அறிமுகபடுத்தி ஈழத்து சிக்கலை பற்றி பரப்புரை செய்தவர். தனது தென் மொழி செய்தித்தாள் மூலம் தேசிய தலைவரின் விடுதலை போராட்டத்தை பற்றி விரிவாக தொடந்து எழுதி தமிழக மக்களுக்கு புரிய வைத்தவர். தனி தமிழ்நாட்டை ஆதரித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தவர் .  ராசீவ் காந்தி இறப்பதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய கவிதையின்  வரி படி ராசீவ் காந்தி கொல்லப்பட்டதால்  தடா சட்டத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உதகை வானொலியில் விடுதலை புலிகள் இயக்கத்தை பற்றி தவறாக செய்தி ஓலி பரப்பியதால் அதை குண்டு வைத்து தகர்த்த வழக்கில் பெருஞ்சித்தனார் மகன் பொழிலன் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் உள்ளார்.
அத்தகைய பெருந்தமிழர் நினைவிடத்திலிருந்து  மாவீரர் சுடரை தடா ராசா அவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு  சுடர் ஏற்றி தொடங்கி வைக்க  அதை  புகழ் செல்வி பெற்று கொண்டார்.அவரிடமிருந்து வேளச்சேரி தமிழ்த் தேவன் அவர்கள் பெற்று கொண்டு அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவீரர் நிகழ்வு நடக்கும்   பள்ளி திடலை நோக்கி தனது ஓட்டத்தை தொடங்கினார்.காவல் துறையின் சிக்கல்களை  தாண்டி நாம் தமிழர் செயல் வீரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் சுடர் ஏந்தி தங்களது ஓட்டத்தை தொடர்ந்தனர் . .மாலை 5.30 மணியளவில் சுடர் அரங்கத்தை நெருங்க அங்கிருந்த ஏராளமான இனபற்றாளர்கள் நம்முடன் கலந்து கொண்டனர் .விண்ணை முட்டும் மாவீரர் வீர முழக்கங்களோடு பெருங்கூட்டம் சுடரோடு பள்ளிதிடலுக்குள் நுழைய அங்கு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் எழுந்து நின்று சுடருக்கு மரியாதை செலுத்தி வரவேற்றனர்
சுடர் ஏந்தி வந்த நாம் தமிழர் கட்சி தோழர்களிடமிருந்து  சுடரை  தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது பெற்று கொள்ள தமிழர் மணிவண்ணன் ஐயா அவர்கள் அங்கிருந்த மாவீரர் சுடரை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவீரர் சுடர் ஏந்தி வந்த 20 ற்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தோழர்களுக்கும்  புகழ் செல்வி ஆசிரியர் பரணி பாவலர், அழகிரி, ராமச்சந்திரன்  சக்தி,செந்தமிழன்,சத்யா ,  நமசிவாயம்,அவர்களுக்கும் அயராது வேலை செய்த கல்லுக்குட்டை ஆனந்த் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் – தமிழ்த் தேவன்

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு சென்னை தியாகராய நகர் செ. தெ .நாயகம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலாவதாக மேடவாக்கத்தில் உள்ள பெருந்தமிழர் பாவலரேறு பெருஞ்சித்தனார் நினைவிடத்தில் நாம் தமிழர் தலைமை நிர்வாகி தடா ராசா அவர்கள்  பெருஞ்சித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு அவர்கள் பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு வீரவணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தடா ராசா அவர்கள் பெருஞ்சித்தனார் மற்றும் அவர் மகன் பொழிழலுடன் ஒரு வருடம் சிறையில் இருந்த அனுபவத்தை அங்கிருந்த உணர்வாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பெருந்தமிழர் பெருஞ்சித்தனார் அவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை தமிழ் நாடு முழுக்க ஊர் ஊராக அழைத்து சென்று மக்களுக்கு அறிமுகபடுத்தி ஈழத்து சிக்கலை பற்றி பரப்புரை செய்தவர். தனது தென் மொழி செய்தித்தாள் மூலம் தேசிய தலைவரின் விடுதலை போராட்டத்தை பற்றி விரிவாக தொடந்து எழுதி தமிழக மக்களுக்கு புரிய வைத்தவர். தனி தமிழ்நாட்டை ஆதரித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தவர் .  ராசீவ் காந்தி இறப்பதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய கவிதையின் வரி படி ராசீவ் காந்தி கொல்லப்பட்டதால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உதகை வானொலியில் விடுதலை புலிகள் இயக்கத்தை பற்றி தவறாக செய்தி ஓலி பரப்பியதால் அதை குண்டு வைத்து தகர்த்த வழக்கில் பெருஞ்சித்தனார் மகன் பொழிலன் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் உள்ளார்.

அத்தகைய பெருந்தமிழர் நினைவிடத்திலிருந்து மாவீரர் சுடரை தடா ராசா அவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு ஈகை சுடர் ஏற்றி தொடங்கி வைக்க அதை புகழ் செல்வி பெற்று கொண்டார்.அவரிடமிருந்து வேளச்சேரி தமிழ்த் தேவன் அவர்கள் பெற்று கொண்டு அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவீரர் நிகழ்வு நடக்கும் பள்ளி திடலை நோக்கி தனது ஓட்டத்தை தொடங்கினார்.காவல் துறையின் சிக்கல்களை தாண்டி நாம் தமிழர் செயல் வீரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் சுடர் ஏந்தி தங்களது ஓட்டத்தை தொடர்ந்தனர் . .மாலை 5.30 மணியளவில் சுடர் அரங்கத்தை நெருங்க அங்கிருந்த ஏராளமான இனபற்றாளர்கள் நம்முடன் கலந்து கொண்டனர் .விண்ணை முட்டும் மாவீரர் வீர முழக்கங்களோடு பெருங்கூட்டம் சுடரோடு பள்ளிதிடலுக்குள் நுழைய அங்கு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் எழுந்து நின்று ஈகைச்சுடருக்கு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

ஈகைச்சுடர் ஏந்தி வந்த நாம் தமிழர் கட்சி தோழர்களிடமிருந்து சுடரை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது பெற்று கொள்ள தமிழர் மணிவண்ணன் ஐயா அவர்கள் அங்கிருந்த மாவீரர் ஈகைச்சுடரை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவீரர் ஈகைச்சுடர் ஏந்தி வந்த 20 ற்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தோழர்களுக்கும் புகழ் செல்வி ஆசிரியர் பரணி பாவலர், அழகிரி, ராமச்சந்திரன் சக்தி,செந்தமிழன்,சத்யா ,  நமசிவாயம்,அவர்களுக்கும் அயராது வேலை செய்த கல்லுக்குட்டை ஆனந்த் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் – தமிழ்த் தேவன்

முந்தைய செய்தி[காணொளி இணைப்பு] தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .
அடுத்த செய்திmaveerar thina oorvalam.mp4