நாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் விழிப்புணர்வு பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்ட வேண்டும். மக்கள் நல பணியில் ஒவ்வொரு நாம் தமிழர் செயல் வீரர்களும் ஈடுபடவேண்டும் என்ற செந்தமிழன் சீமானின் அறிவுரைக்கு இணங்க கருப்பு குரல் ப. மகேந்திரவர்மா(உதவி இயக்குநர்) தலைமையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது .அதன்படி தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சென்னை வடபழநியிலிருந்து போரூர் வரை உள்ள ஆர்க்காடு சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்க்காடு சாலையை செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.20.12.2010 அன்று காலை 10 மணி அளவில் அன்பு தென்னரசு ,இயக்குநர் சிபிசந்தர் ,வேளச்சேரி தமிழ்த்தேவன், மூதுரை பொய்யாமொழி,இரா.தேவா,போரூர்.த.சுகுமாரன்,
தாமரை,முரளி ,பூவை குமார் மற்றும் பகுதி சார்ந்த நாம் தமிழர் செயல் வீரர்களும் சாலையை செப்பனிடும் பணியை கொட்டும் மழையிலும் சிறப்பாக செய்தனர்.



இந்த மக்கள் நலப்பணிக்கு, அப்பகுதி பொது மக்களும், தானி(ஆட்டோ) ஓட்டுநர்களும் நம்மோடு கலந்து கொண்டு களப்பணி ஆற்றியது நம்மை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது.அந்தந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நாம் தமிழர் கட்சியின் செயல் பாட்டை பெரிதும் பாராட்டினர்.நாம் தமிழர் கட்சியினர் வெறும் வாய் சொல் வீரர்கள் அல்ல. அவர்கள் செயல் வீரர்கள் என்பதை இந்த நிகழ்வு எடுத்து காட்டுவதாக இருந்தது.இந்த பணிக்கு நிதி உதவி அளித்து சிறப்பாக செயல்பட உடனிருந்து பணியாற்றியோர் பேராசிரியர் சோழன் ,வெற்றி குமரன் ,பரணி பாவலர் ,போரூர் சுகுமார்,திருமலை கண்ணன்,பூவிருந்தவல்லி குமார் , இயக்குநர் சிபிசந்தர் ஆகியோர். இது ஒரு தொடக்கமே இது போன்ற செயல் திட்டங்கள் தமிழ் நாடு முழுக்க இனி செயல்படுத்தப்படும்.