நம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்

21

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு சாதகமாக செயற்பட்டதால் ஈழத்தில் அப்பாவி பொது மக்கள் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் இழக்க நேரானது. அவருக்கு அளித்திருந்த வேலையினை நேர்மையாகவும் சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார்.

ஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றது. இவ் வேளையில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. கூடுதலாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் நம்பியார் சரியாக செயற்படவில்லை எனவும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.