[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் நினைவு நாள் நிகழ்வு.

24

கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 24-12-2010 அன்று தந்தை பெரியார் நினைவு தினமும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு தினமும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டன. நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமை தாங்கினார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும், ஆயிக்குளம் சாலையில் உள்ள தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கும் சிறப்பு அழைப்பாளரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் அ.நல்லதுரை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.நிகழ்விற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.வினோபா என்ற வீரக்குமரன் முன்னிலை வகித்தார்.நிகழ்வினை ஒட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அமைதி ஊர்வலமும் நடைப்பெற்றது. அதன் பிறகு கட்சியின் நகர தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு கட்சி கட்டமைப்பு பணிகள் குறித்து விவாதித்தனர். நிகழ்வுகளை கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.