கடலூர் தெற்கு புதிய உறுப்பினர்கள் சந்திப்பு

புதியதாக இணைந்த உறவுகளைச் சந்தித்து கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடு குறித்து கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ர.செல்வம் விளக்கிக் கூறினார்.

மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

05.03.2023 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்

11.03.23 சனிக்கிழமை அன்று திருப்போரூர் தொகுதி குழிப்பந்தண்டலத்தில் தி.க.குன்றம் ஒன்றியதலைவர் திரு.ராஜா தலைமையில் 16 இலுப்பைமர கன்றுகள் வைக்கப்பட்டன.இந்த கன்றுகளை தொகுதி செயலாளர் திரு. தேவராஜ் அவர்கள் இலவசமாக வழங்கினார்.

இராணிப்பேட்டை தொகுதி மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதியில் மாற்ற கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

கூடலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கூடலூர் தொகுதி 19.03.23  ஞாயிற்றுக்கிழமைகட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கூடலூர் பொதுக்கூட்டம் தொடர்பாக தொகுதி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

கிளை கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொத்தட்டை, அரிகேரி,எறப்பாவூர்,சேவூர்,ஆதமங்கலம்,தொளார்,ஆகிய கிராமங்களில் தொகுதி தலைவர் சு.கதிரவன் மற்றும் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

கீ வ குப்பம்  சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட குடியாத்தம் ஒன்றியம்  இராமாலை பஞ்சாயத்தில் புலி கொடி ஏற்றபட்டது.

கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை

புலிவலம் கிராமத்தில் கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கிராமத்தில் ஏராளமான மக்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதில் மு.தொ.த.ராஜா மற்றும் கிராம உறவுகள் கலந்து கொண்டனர்.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மார்ச் மாத கலந்தாய்வு கூட்டம், தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் கண்டோன்மெண்ட் நகர தேர்தல் பணிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.