தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர்க்கு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை குற்றவாளிகள்...
11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும் – செந்தமிழன் சீமான்
11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும்: நாம் தமிழர் கட்சி
சென்னையை அடுத்த போரூரில் கட்டுமானத்தில் இருந்த 11 மாடி அடுக்குக் கட்டடம் நொறுங்கி விழுந்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியையும்...
தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல்.இடம்:சென்னை (04.07.2016)
தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல்.இடம்:சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் நாள்:04.07.2016
கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் அவர்களின் திருமண நிகழ்வுக்கான சுற்றறிக்கை.
கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் அவர்களின் திருமண நிகவுக்கான சுற்றறிக்கை.
அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 33-வது நினைவு நாளில் அவருடைய கனவை நினைவாக்க உறுதியேற்க வேண்டும்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என வாழ்ந்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 33-வது நினைவு நாளில் தமிழர்கள் யாவரும் அவருடைய கனவை நினைவாக்க உள உறுதியேற்க வேண்டும்.
தமிழர்களுக்கென தனி தேசம் காண நினைத்த...
ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது
ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்கும் நிகழ்விற்கு சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற போர்வையில், தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள...
தமிழக மக்கள் நிகழ்த்திய வரலாற்றுப் புரட்சி! தேர்தல் முடிவு குறித்து செந்தமிழன் சீமான்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதுகுறித்து நாம் தமிழர்கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாதசக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத்துயரங்களுக்குத் தீர்வுகேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியானநடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த மாண்புமிகுஜெயலலிதா அவர்களுக்கு அபரிவிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியைநிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப்பாதுகாக்க உரியபடி போராடவும் அ.தி.மு.க.வே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாகதீர்மானித்திருக்கிறார்கள். மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப்பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக்காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும்அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின்வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சிதளிர்விட முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். பலகட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை எனமூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெறமுடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும்ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம்.
எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச்சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள்.இலையை ஆதரித்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தபோதே அ.தி.மு.க.வின் வெற்றியையாராலும் தடுக்க முடியாது என நான் அழுத்தமாக முழங்கி வந்தேன். மாபெரும் வெற்றியைஅடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் பேணும் நடவடிக்கைகளை முதல்வர் எந்நாளும்தொடர்வார் என்றும், நாடாளுமன்றத்திலும் மிகுந்த பலத்தோடு தமிழகத்துக்கான உரிமைகளைமுழங்க வைப்பார் என்றும் நாம் தமிழர் கட்சி நம்புகிறது.
இதுகாலம் வரை மத்தியில் செல்வாக்கு இருந்தும் பதவி பகட்டுகளுக்காக ஈழம் தொடங்கிதண்ணீர் விவகாரம் வரை சுயநல நோக்கில் மட்டுமே செயல்பட்ட தி.மு.க.வை வீட்டில் உட்காரவைத்து தக்கபடி பதிலடி கொடுத்திருக்கும் தமிழக மக்கள் அறிவிற்சிறந்தவர்களாக தங்களைநிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நியாயத்தின் வழி நின்று தக்க தீர்வை அளித்த தமிழகமக்களுக்கும் நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்கிறது.
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
உணர்வுகளை மதித்து இனம் படத்தை நிறுத்திய லிங்குசாமிக்கு நன்றி! செந்தமிழன் சீமான் அறிக்கை
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த 'இனம்' படத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓடாதபடி நிறுத்திக் கொள்வதாக...
கொலையான என்.எல்.சி. தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு! – சீமான் கோரிக்கை
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளரை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்ற விவகாரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
நெய்வேலியில் என்.எல்.சி....





