[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில்...

இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை...

தமிழ் தம்பி சீமான் ! – அறிவுமதி

இருந்தான் தம்பி என் தம்பி இருந்தான்! உள்ளே இருந்தான்! ஆம் உனக்குள்ளே எனக்குள்ளே உணர்வுள்ள நமக்குள்ளே இருந்தான்! தொரப்பாடி சிறைக்குள்ளே துளியளவே இருந்தான்! கடல் கடந்த தமிழர்களின் கருத்தான எண்ணத்தில் கடலளவு இருந்தான்! என்றும் இருப்பான்! அடங்கா பெரு நெருப்பின் அணையாத உணர்வழகன்! சிரிப்புக்குள் எகத்தாளம் சிறிதளவே சேர்த்து வைத்து எதிரிகளை மேடையில் ஏராளக் கேள்விகளால் குடைந்தெடுக்கத் தெரிந்திருக்கும் குடிசையிலே பிறந்து வந்த என் குற்றமற்ற தமிழழகன்! ஈழப் பெருந்தலைமை எழுப்பி வைத்தத் தமிழ் விழிப்பை ஊர்தோறும் உசுப்பிவிட உச்சரிப்பால் உழைப்பதற்கு உயர்ந்தெழுந்த உயிரழகன்! கைவிரித்து அவன்பேச கை கட்டி வாய் மூடி கவனிக்கும் கூட்ட மொத்தம் அவனோடு அவனாக அவன் சொல்லும் கருத்தோடு அப்படியே பயணிக்கும்! அதைத்தானே அதிகாரம் அச்சத்தில் கவனிக்கும்! அடிக்கடிதான் அழைத்தழைத்து சிறைக்குள்ளே போட்டடைக்கும்! இடுக்கில் வரும் நீதியினால் இழுத்துவிட முயன்றாலும் இரக்கமற்று இழுத்தடிக்கும்! நடக்குமுறை அத்தனையும் நாதி யற்ற தமிழர் மேல் அடக்கு முறை ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிழக்கு முறை தேடி கிளர்ந்தெழத்தான் வைத்த அந்தக் கிழத்தான் பெரியாரில் கிளைத் தெழுந்த கலை வளத்தான் என் தம்பி இதற்கெல்லாம் அஞ்சான்! இமியளவும் துஞ்சான்! அலுக்காத உடற்பயிற்சி அழகாக்க அவன் உடலை சேழிப்பான தேக்கெடுத்துச் சேதுக்கி வைத்தப் பலகையியென... அடுக்கடுக்காய் நூலெடுத்து அடிக் கோடும் தான் போட்டு அன்றாடம் படித்ததனால் அணை கட்டித் தேக்கிவைத்த ஆற்றல் மிகு அறிவோடு... சிறிதேனும் ஓய்வின்றி தினம் தினமும் விவாதித்துச் சேர்த்துக் கொண்ட அந்தப் பேரறிவாடு... வெளியே வந்தான் பார் என் வெற்றித் தமிழ்ப் பிள்ளை! ஆணவக் கடுநெஞ்சர் அடுக்கடுக்குத் தடை தாண்டி மீனவத் தமிழ் உறவோர் மீளாத் துயர்...

சிங்கள கொலைகார அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து கடிதம்.

கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட...

தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில் – பேரறிவாளன்

“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என...

அண்ணைக்கு அன்னை – அறிவுமதி கவிதை

அழுகின்றேன் அம்மா உன் தூய மகன் கருவறையைத் தொழுகின்றேன் அம்மா என் இனத்தை எழுப்புதற்கே இனிய மகன் பெற்றெடுத்தாய் இன்று எழ முடியா நோய்தன்னை எதற்கம்மா தத்தெடுத்தாய்? ஈரய்ந்து மாதந்தான் உன் பிள்ளை உன் வயிற்றில் இருந்தான் பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க காடென்னும் கருவறைக்குள் கன காலம் கன காலம் கரந்தான் தமிழருக்கே...

உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்

உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில் இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின்...

செந்தமிழன் சீமான் – தலைமை ஒருங்கிணைப்பாளர்

  செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி. Senthamizhan Seeman, Chief Coordinator, Naam Thamizhar Katchi செந்தமிழன் சீமான் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன், அன்னம்மாள் ஆவர்....