செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
Senthamizhan Seeman,
Chief Coordinator,
Naam Thamizhar Katchi
செந்தமிழன் சீமான் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன், அன்னம்மாள் ஆவர். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ‘தமிழர் தந்தை’ சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று ஒருங்கிணைத்து வருகிறார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும்! எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! போன்ற முழக்கங்களை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி அரசியலை முன்னெடுத்து செல்கிறார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழிலேயே எப்பொழுதும் பேசுபவர். சிறந்த மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர்.
நாம் தமிழர் இயக்கத்தை துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே18, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரள (முல்லை பெரியாறு), கர்நாடக அரசுகளை (காவிரி நதிநீர் சிக்கல்) கண்டித்தும், தாமிரபரணி நீரை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், நெடுவாசல் – கதிராமங்கலம் போன்ற கிராமங்களில் விவசாய நிலங்கள் மண்ணை நஞ்சாக்கும் திட்டங்களுக்காக மக்களை ஒடுக்கும் அரசைக் கண்டித்தும், சல்லிகட்டு தடைக்கு எதிராகவும், மாட்டிறைச்சி தடையை எதிர்த்தும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தும், GST சரக்கு மற்றும் சேவை வரி உயர்வைக் கண்டித்தும், மருத்துவப் படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு NEET எதிர்த்தும், மியான்மரில் ரோகிங்கியா முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், சாதியப் படுகொலைகளைக் கண்டித்தும், கல்விக்கடன் தொல்லையால் மாணவர்கள் தற்கொலை, திருவள்ளுவர் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத வாரத்தை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து பரப்புரை மேற்கொண்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி கண்டது.
தைப்புரட்சியில் சீமானின் பங்கு
சல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீமான் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்.
27 டிசம்பர் 2016 ஜல்லிக்கட்டுக்காக நாம் தமிழர் கட்சி சார்பாக உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.
நூல்கள்
வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010)
திருப்பி அடிப்பேன்