கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகரும்பூர் ஊராட்சி சார்பாக 28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
15/7/2021 அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமால்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஐய்யாவின் சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது
சோளிங்கர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் ஒன்றியம் உத்திரம்பட்டு ஊராட்சி செயலாளரை பணியிடமாற்றம் செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆரணி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், பெருபாட்டன் பூலித்தேவன், தோழர் தமிழரசன், மருத்துவர் அனிதா ஆகியோர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு
கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக 20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – பூலித்தேவனுக்கு தமிழரசன், தங்கை அனிதா புகழ்வணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்...








