செய்திக்குறிப்பு: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – இரண்டாம் நாள் (05-05-2019 ஒட்டப்பிடாரம்) | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நேற்று 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
முதலாம் நாளான நேற்று 04-05-2019 மாலை 05 மணியளவில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து மதுரை, அனுப்பானடி, தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் திருப்பரங்குன்றம், 16 கால் மண்டபம் அருகிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
அனுப்பானடி பொதுக்கூட்டம்: https://www.youtube.com/watch?v=vs_-QLzkhTU
16 கால் மண்டபம் பொதுக்கூட்டம்: https://www.youtube.com/watch?v=oxiOPvDJaV4
இரண்டாம் நாளான இன்று 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், முல்லைக்காடு , தங்கபாரதி திரையரங்கம் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், புதிய முத்தூர் கடைவீதியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
மூன்றாம் நாள் 06-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி, தருவைக்குளம் மாதாக் கோயில் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கடைவீதியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைப்பு:
https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
.குறிப்பு: அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம் நேரம் மாற்றப்பட்டுள்ளது.