முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க,…

0

ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத் தன் உடலிலே கொட்டியவன்.

அன்னைத் தமிழீழம் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டது. நம் அன்பு உறவுகள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்து இன்னொரு நாட்டை அண்டி ஒண்டிப் பிழைக்கிற அவலநிலையிலிருந்து மீள, எழ எல்லா மொழிவழி தேசியஇனங்களையும் போல உரிமைபெற்று வாழ தொடர்ச்சியாக தொய்வின்றி களத்திலே நின்று போராடுவோம் என்ற உறுதியேற்போம்.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் எந்த உயர்ந்த புனித நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரை ஈந்தானோ அந்த நோக்கம் நிறைவேறும்வரை தமிழ் இளம் தலைமுறையினர் உறுதியாக நின்றுப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!

இதுதான் அந்த மாவீரனுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக இருக்கும்.

அன்புத்தம்பி முத்துக்குமரனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்

நாம் தமிழர்!

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி)
அடுத்த செய்திஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க,…