முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான…

1

சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த திருச்சி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து பதற்றமும், பெரும் மனவேதனையுமடைந்தேன்.

தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களுக்கும், கொடும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படும் அவர்களது விடுதலை கோரிக்கையானது மிக நியாயமானது. ஆகவே, அவர்களின் தார்மீகக்கோரிக்கையை ஏற்று, சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். (2/2)

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருபெரும்பபூதூர் தொகுதி – எரி உருளை விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்