பழம்பெரும் திரைக்கலைஞர் ஐயா ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
காலத்தால் அழியா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் நடிகரான ஐயா ஸ்ரீகாந்த் அவர்களின் இழப்பு ஈடுஇணையற்றது. ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
(2/2)


