காலத்தைப் போல அருமையான அரசன் யாருமில்லை. நூற்றாண்டுகள் கணக்கில் நமக்கு முன்னோர்கள் கூறும் புத்திமதியை ஒரு வினாடியில் அது கூறிவிடும்.
– ஸ்பிட்
நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது.
– பாரதிதாசன்
உழைப்பு உடலை வலிமைப்படுத்தும். கஷ்டங்கள் உள்ளத்தை வலிமைப்படுத்தும்.
– பிளமிங்
வெற்றியை விட தோல்விகள்தான் அதிகப்பாடங்களை கற்றுத்தருகிறது.
– காரல் மெனிக்கர்
மனம் அளப்பரிய சக்தியை தன்னுள் கொண்டிருக்கிறது. ஆனால், தன் சக்தி அனைத்தையும் மனிதன் வீணான விசயங்களில் மட்டும் செலவழித்துக்கொண்டிருக்கிறான்.
– புருசோத்தமானந்தர்


