சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அரணையூர் கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஆரோக்கியசாமி அவர்களின் மனைவி அந்தோணியம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
தனது உயிர்த்துணையான மனைவியை இழந்து, பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பி ஆரோக்கியசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி அந்தோணியம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


