இன விடுதலைக் களத்தில்
என் நிழல் தடம் பற்றி
தளராமல் நடக்கும்
இளையவன்!
எத்தனை இடர் நேர்ந்தாலும்
எத்தனை சிறை வந்தாலும்
சிதையாமல் ஒளிரும்
இனியவன்!
தன்னறிவும் தர்க்க அறிவும் கொண்டு தன் சொல்லாயுதத்தால்
கொள்கை காக்கும்
துணையவன்!
உரிமைச் சமரினில் உள்ள உறுதியோடு சளைக்காமல்
சாட்டையாய் சுழன்று சாதிக்கும்
வலியவன்!
எனது அன்புத் தம்பி
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர்
சாட்டை துரைமுருகனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@Saattaidurai


