கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம்.
குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல.
தவறு எனில் கற்றுக்கொடுங்கள்.
சரி எனில் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதியதை முயற்சித்ததில்லை.
நம் பயம் எதிரிக்குத் தைரியத்தைக் கொடுக்கும்.
நம் அமைதி அவனுக்குக் குழப்பத்தைக் கொடுக்கும்.
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் வென்றதில்லை.
யாரை எங்கே நிறுத்தவேண்டும் என்பதைவிட, நாம் எங்கே நிற்கவேண்டும் என்பதை உணர்வதே சிறந்தது.
வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச்சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. சாதாரண வேலையைக்கூட மிகச்சிறந்த முறையில் செய்கின்றனர்.
ஒருமுறை விழுந்து பாருங்கள். எழும்போது உலகம் உங்களுக்குப் புதிதாகத் தெரியும்.
ஒருமுறை தோற்றுப்பாருங்கள். வெல்லும்போது உலகம் உங்களைப் புதிதாகப் பார்க்கும்.
நாம் ஒவ்வொரு நிலையிலும் தடுமாறாமல் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், உணர்ச்சி வசப்படும்போது வார்த்தைகளையும் , கோவப்படும்போது வார்த்தைகளையும், உதவிக்கு அழைக்காமலிருந்தால் போதும்.
தேடாதபோது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டுமல்ல, வாழ்க்கையும்தான்.


