முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத்தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணித் தலைவர்கள்…

0

ஈழத்தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணித் தலைவர்கள் கேப்டன் முரளி மற்றும் மேஜர் கிண்ணி ஆகியோரின் தாயார் பேரன்பிற்குரிய அம்மா கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

கிண்ணியம்மா என்று ஈழச்சொந்தங்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அம்மாவின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும். என்னுயிர் அண்ணன் தமிழ்த்தேசியத் தலைவரைக் காண ஈழத்தாயகம் சென்றிருந்தபோது, அன்பு அண்ணன் கஸ்ரோ அவர்களது இல்லத்தில் வாஞ்சையோடு உணவு பரிமாறிய அன்னையின் பேரன்பு இன்னும் நினைவில் நிற்கிறது.

அம்மாவை இழந்து வாடும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், ஈழச்சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இனத்தின் விடுதலைக்காக இரு மகன்களையும் ஈகம் செய்த அன்னை கிண்ணியம்மா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திசிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை…