முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, திருமங்கலக்குடியைச் சேர்ந்த மூத்த…

0

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, திருமங்கலக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அப்பா ஆதிகேசவன் அவர்களின் இளைய மகனும், அன்புத் தம்பி வழக்கறிஞர் ரத்தினவேல் பாண்டியன் (எ) பாபு அவர்களின் இளைய சகோதரனுமாகிய அன்பு இளவல் ஆதி குமரவேல் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயர் அடைந்தேன்.
தமிழின நலன் மீது ஆர்வம் கொண்டு உழைத்த தம்பி ஆதி குமரவேல் இழப்பு எதனாலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
தம்பி ஆதி குமரவேல் அவர்களை இழந்து வாடும் அப்பா வழக்கறிஞர் ஆதி கேசவன் குடும்பத்தினர், தம்பிகள் வழக்கறிஞர் ஆதி ரத்தினவேல் பாண்டியன், வழக்கறிஞர் ஆதி சங்கர், வழக்கறிஞர் ஆதி பிரபாகரன், ஆதி.ராமசாமி உள்ளிட்ட அனைவருக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தம்பி ஆதி குமரவேல் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த, நாம்…
அடுத்த செய்திதமிழ்ச்சமூகத்தின் தாய்க்குடியான குறவர் சமூக மக்களின் உயர்வுக்கும், உரிமைக்குமாக அயராது…