முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளர் ஐயா சருகுவலையப்பட்டி பா.இராஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த ஐயா ராஜேந்திரன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சருகுவலையப்பட்டி பா.இராஜேந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – மதுரை மேற்கு தொகுதிச் செயலாளர்…