நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி த.சிலம்பரசன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சிலம்பரசன் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சிலம்பரசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



