நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின் செயலாளர் ஆருயிர் இளவல் இரவிவர்மன் மற்றும் அன்புத்தம்பி அருள்மொழிவர்மன், அன்புத்தங்கை மருத்துவர் காவியா ஆகியோரின் தந்தையும், மேனாள் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரும், தமிழியல் ஆய்வறிஞருமான புலவர் அப்பா ம.சுப்ரமணியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
தமிழ் மீது அளவற்ற பற்றுறுதி கொண்ட அப்பா சுப்ரமணியன் அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கான பேரிழப்பு.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி இரவிவர்மன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா ம.சுப்ரமணியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



