எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் – மீனவர் பாசறை நடத்துகின்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராணுவம் நம்முடைய மீனவச் சொந்தங்களைச் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து, படகுகளைப் பறித்து ஏலம்விட்டு, சுட்டுக்கொலை செய்து, கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்தச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து,
மண்ணுக்கும் மக்களுக்குமாகப் போராடி வருகிற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேரெழுச்சியாகப் பங்கேற்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமேசுவரம் – தங்கச்சிமடத்தில், நடைபெறவிருக்கின்றது.
நாள்: 22.03.2025 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மீனவர் பாதுகாப்பே
மானத்தமிழர் பாதுகாப்பு!
நாம் தமிழர்!
👉 திரள்நிதிப் பங்களிக்க: https://t.co/zGIXIS9ops



