முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

(2/2) இங்கு, கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க…

0

(2/2)

இங்கு, கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறதே தவிர, மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க இதுவரை எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இங்கு, பறிக்கப்பட்ட படகுகளுக்குத்தான் இழப்பீடு வழங்கப்படுகிறதே தவிர, படகுகள் பறிக்கப்படாமல் பாதுகாக்க வழியென்ன?
எந்த ஒரு தமிழ் மீனவரும் இலங்கை கடற்படையால் கொல்லப்படாமல் தடுக்கத்தான் ஓர் அரசு வேண்டுமே தவிர, கொல்லப்பட்ட பிறகு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க எதற்கு ஓர் அரசு?

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டு மீனவர்களை இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்வதை நாம் பொறுத்துப்போகிறோம்?

போராடி, போராடிச் சோர்ந்து போயுள்ள நம் மீனவச்சொந்தங்கள் படும் துயரத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் வேடிக்கைபார்க்கப் போகிறோம்? எப்போதுதான் இதற்கு நிலைத்த தீர்வு காணப்போகிறோம்?

தண்ணீர் கடலில் மிதக்கும் படகைப்போல, கண்ணீர் கடலில் மிதக்கும் நம் மீனவரின் வாழ்வில் சூழ்ந்துள்ள துயர இருள் விடிவது எப்போது?

மீனவர் சிக்கலுக்கு மீனவரே போராடிச்சாக வேண்டுமென்றால் உறவாய், இனமாய் உயிரோடு நாம் வாழ்வதெதற்கு?

ஆகவே, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள கச்சத்தீவு வழக்கை விரைவு படுத்தி, கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘மீன் பிடிப்பது எங்கள் பிறப்புரிமை, அதைப் பாதுகாப்பது அரசின் கடமை’ என்ற கொள்கை முழக்கத்தோடு, இன்று 22.03.25 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் கடற்கரை மாநகராம் இராமேசுவரம் – தங்கச்சிமடத்தில் நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது.

தமிழ் மக்களுக்காக எப்போதும் போராட்டக்களத்தில் நிற்கும் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்கும் இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், என் பேரன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகள், நம் மீனவச் சொந்தங்களைப் பாதுகாக்க பெருந்திரளாகப் பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மீனவ மக்கள் வாழ்வுரிமை!
தமிழர் எங்கள் பிறப்புரிமை!

கச்சத்தீவை மீட்க வேண்டும்!
கடல்தாயின் பிள்ளையை காக்க வேண்டும்!

மீன்பிடித்தொழிலை உயர்த்த வேண்டும்!
மீனவர் கண்ணீரைத் துடைக்க வேண்டும்!

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

திரள்நிதிப் பங்களிக்க: https://t.co/zGIXIS9ops

#மீனவர்களோடு_நாம்தமிழர்

முந்தைய செய்திமீனவ மக்கள் வாழ்வுரிமை! தமிழர் எங்கள் பிறப்புரிமை! மீனவர் பாதுகாப்பே!…
அடுத்த செய்திஅண்மையில் மறைவெய்திய இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, சத்திரக்குடியைச்…