முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!…

0

"உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!" – என்று உணர்த்தியவர்.

"விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு உரம்!" – என்று கற்பித்தவர்.

"செயற்கை இரசாயன உரங்களைப் பயிர்களின் வேர்களில் கொட்டி விளைவதெல்லாம் விசமாக விளைகிறதே..!" – என்று உயிர் வலித்தவர்.

"நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!" என்று
இயற்கை வேளாண்மையின் ஈடுஇணையற்ற அவசியத்தைத் தன் வாழ்வில் இறுதி மூச்சுவரை எடுத்து இயம்பியவர். தன்னை நேசிக்காது தான் பிறந்த மண்ணையும் இந்த மக்களையும் உயிரினும் மேலாக நேசித்த பேரன்புக்காரர்.

இயற்கை வேளாண் பேரறிஞர்
தமிழ்ப் பெருங்குடியோன்
நமது பெரிய தகப்பன்
நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளில்,

மதிப்புமிக்க அந்தப் பெருந்தகையின் பெரும்புகழைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு…