முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக்…

0

உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக் கைகளை விரித்து நீட்டி, அருள்நெறி பொழிந்த இறைமகன் இயேசு பிரான், முள்கிரீடம் தாங்கி சிலுவை சுமந்த புனித வெள்ளி ஈகைத் திருநாளில் இறைமகனை நினைவுகூர்ந்து போற்றி வணங்கும் கிறித்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

'உன்னைப்போல் உன் அயலானையும் நேசி' என்று கற்பித்து, உலக நன்மைக்காக தம்மையே ஈகம் செய்த இறைமகனின் எல்லையற்ற கருணையும், ஈடில்லா பேரன்பும் உங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நிறைந்து, நிலைக்க விழைகின்றேன்!

முந்தைய செய்திதமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலச்…