முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த…

0

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

நீதிமுறைமைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் மக்களோடு மக்களாகப் பழகி எளிமையின் அடையாளமாய் திகழ்ந்த நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி தமிழ் மண்ணிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், நீதித்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

மாண்பமை நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருப்பத்தூர் ஆம்பூர் மண்டலம் (ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி மண்டலம் (கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்