மக்களிடையே நற்கருத்துக்களை விதைப்பதன் மூலம்தான் சமூக மாற்றத்தையும், நல்லரசியலையும் படைக்க முடியும் எனும் நம்பிக்கை கொண்டு, அயராது பணியாற்றும் சமரசமற்ற ஊடகவியலாளர்!
இராவணா எனும் தனி ஒரு வலையொளியை உருவாக்கி, தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு வெளிச்சம்பாய்ச்சி வலிமைசேர்க்கிற
மூத்த பத்திரிக்கையாளர்!
உணர்வாகவும், உறவாகவும் எம்மோடு எப்போதும் இணைந்து நிற்கிற அன்பிற்கினிய ஐயா பா.ஏகலைவன் அவர்களின் தாயார் அம்மா பா.அன்னப்பூரணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தாயை இழந்து வாடும் ஐயாவிற்கும், உறவுகளுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@eagalaivanp



