நாம் தமிழர் கட்சி – ரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சுத்தமலை பெருமாள் இராதாகிருட்டிணன் அவர்களின் தாயார் அம்மா இரா.சின்னப்பொண்ணு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இரா.சின்னப்பொண்ணு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



