தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அரசியல் முரண்களைக் கடந்து அனைவரிடமும் நட்பாகப் பழகும் பெருந்தன்மையும், பேரன்பும் கொண்ட ஐயா இல.கணேசன் அவர்கள், திருமணம் செய்துகொள்ளாமல்
ஏற்ற கொள்கைக்காக தம் வாழ்வை முற்று முழுதாக அர்ப்பணித்து இறுதிவரை உறுதியாக வாழ்ந்து மறைந்த பெருந்தகையாவார்!
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



