விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களது சிற்றன்னை அம்மா செல்லம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து ஆழ்ந்த மனத்துயரமடைந்தேன்.
பெற்றெடுத்து வளர்த்த தந்தையையும், உயிருக்கு உயிரான சகோதரியையும் இழந்த நிலையில் தற்போது சிற்றன்னையையும் இழந்திருக்கிற அண்ணனின் நிலைகண்டு மனம் கலங்குகிறேன்.
தன்னைச் சீராட்டி வளர்த்த மற்றொரு தாயான சிற்றன்னையின் இழப்பால் வாடும் அண்ணனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செல்லம்மாள் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@thirumaofficial



