நாம் தமிழர் கட்சி – வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி தா.கண்ணன் அவர்களின் தந்தை தமிழரசு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஐயா தமிழரசு அவர்களை இழந்து வாடும் அன்புத்தம்பி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா தமிழரசு அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



