நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கா.அலாவுதீன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி வந்த அன்புத்தம்பி அலாவுதீன் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி அலாவுதீன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



