நாம் தமிழர் கட்சி – அரியலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்துறையார் கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி க.கவியரசன் அவர்களின் தாயார் அம்மா செந்தமிழ்ச்செல்வி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா செந்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



