தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் நிர்வாகியுமான மதிப்பிற்குரிய ஐயா தமிழருவி மணியன் அவர்களது மனைவி அம்மையார் பிரேமகுமாரி மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தனது உயிர்த்துணையை இழந்து வாடும் ஐயா தமிழருவி மணியனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பிரேமகுமாரிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



