‘வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட சமகாலத்தில் மக்கள் மறந்த புரட்சிப்புலி’ என்று அறிஞர் அண்ணாவால் புகழப்பட்ட புரட்சியாளர்..!
தாயக விடுதலைக்குப் போராடி சிறை சென்ற தன்னலமற்ற விடுதலை வீரர்..!
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘சென்னை தொழிலாளர் சங்கத்தை’ 1918 ஆம் ஆண்டு தொடங்கிய பொதுவுடைமை பிதாமகன்..!
இந்திய துணைக்கண்டத்திலேயே முதன் முறையாகத் தொழிலாளர் நாளை ( மே 1 ) கொண்டாடிய தொழிற்சங்கவாதி..!
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் காக்க 1923 ஆம் ஆண்டுத் தொழிலாளர் விவசாயக் கட்சியையும், 1925 ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடைமை கட்சியையும் தொடங்கியப் பெருமகன்..!
1928 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியத் தொடர்வண்டி வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் உரிமை போராட்டங்களை முன்னின்று நடத்தியதற்காக ஆங்கிலேயே அரசால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் போராளி..!
சுயராஜ்யம் யாருக்கு?, மனிதனும் பிரபஞ்சமும், பகுத்தறிவென்றால் என்ன? என்பன உள்ளிட்ட பற்பல நூல்களை இயற்றியதோடு, பிறமொழி நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்து அன்னைத் தமிழுக்கு வளம் சேர்த்த பேரறிஞர்..!
“போர்க்குணம் மிகுந்த நற்செயல் முன்னோடி, பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றிப் புகழப்பட்ட பெருந்தகை…!
பொதுவுடைமைப் போராளி, நம்முடைய பாட்டன், ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலர் பெரும்புகழ் போற்றுவோம்!



