முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத்…

0

தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர்..!

எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!

தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!

என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல்..!

தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த விடுதலைப் பாணர்..!

பாசறைப்பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் இன்று 29-04-2026 பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தினேன்.

அப்பா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை. தம்முடைய எழுத்து,…
அடுத்த செய்தி‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல்…