பொதுவுடைமைத்தத்துவத்தை ஏற்று, பாட்டாளி வர்க்கத்துக்காகப் போராடிய போராளி! அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்த மக்கள் தலைவர்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்! பெருமதிப்பிற்குரிய ஐயா சித்தமல்லி எஸ்.ஜி. முருகையன் அவர்களின் மனைவி அம்மா நாகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன். பெற்ற தாயை இழந்து வாடும் சகோதரர்கள் தமிழ்ச்செல்வன், ரமேஷ், லெனின், பூபேஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
மக்களுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த போராளியைத் தனது வாழ்க்கைத்துணையாக ஏற்ற அம்மா நாகம்மாள் அவர்களின் மறைவு ஈடுஇணையற்றது.
அம்மாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



