முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு…

1

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது.

இக்கைதும், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 5 நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட வாய்ப்புள்ளது எனும் செய்தியும் தமிழ்நாடு அரசின் பாசிசப் போக்கினைக் காட்டுகிறது.

அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் களமிறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

@MRKPanneer @tvmcollector @mkstalin

முந்தைய செய்திஇயல்பாக இரு! – குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை…
அடுத்த செய்திமண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட மகத்தான திரைக்கலைஞன்…