முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து…

0

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!

தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்!

திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!

தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது.

தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!

முந்தைய செய்திஅன்னையர் நாள் வாழ்த்துகள்! ‘சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’…
அடுத்த செய்திஅன்னையர் நாள் வாழ்த்துகள்!